5 இலட்சம் பேர் உயிரைக் காவுக்கொண்ட கொரோனா வைரஸ்


உலகளாவிய ரீதியில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய இன்று காலை (28.06.2020) இலங்கை நேரப்படி 9 மணி வரையிலான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,075,115 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,248,699 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

மேலும் இதுவரை  கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அமெரிக்காவிலேயே அதிகம் பதிவாகியுள்ளது.

இதுவரை அமெரிக்காவில் 128,152 பேர் உயிரிழந்ததுடன் 2,596,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1,081,437 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments: