மஸ்கெலியா தொடர் லயன்குடியிருப்பில் தீ விபத்து 20 பேர் பாதிப்பு


(எஸ்.சதீஸ்)
மஸ்கெலியா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கிலன்டில் லங்கா தோட்டபகுதியில் இரண்டாம் இலக்க 20 குடியிருப்புகளை கொண்ட லயன்குடியிருப்பில் தீபரவல் ஏற்பட்டத்தில் நான்கு குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று சனிகிழமை இரவு 07.30மணியளவில் இடம்பெற்றதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த குடியிருப்பில் இருந்த குடும்பத்தினர் திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்றிருந்த வேலை குறித்த குடியிருப்பில் மின்சார கோளாறு காரனமாக தீ பரவியுள்ளதாகவும் தீபரவ ஆரம்பித்த முதல் குடியிருப்பில் இருந்த உடமைகள் எறிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தீயினை காட்டுபாட்டுக்கு கொண்டுவர தோட்டமக்கள் நடவடிக்கையினை மேற்கொண்ட போது மேலும் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதோடு மொத்தமாக 04 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

வீட்டில் இருந்த கற்றல் உபகரணங்கள் எனய பொருட்களும் சாம்பலாகியுள்ளதாகவும் எந்த உயிர் சேதங்களும் ஏற்படவில்லையென மஸ்கெலியா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

இந்த தீவிபத்தினால் நான்கு குடியிருப்புகளை சேர்ந்த 20 பேர் பாதிக்கப்பட்டு உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.





No comments: