உணவு தவிர்ப்பு போராட்ட கூடாரத்தை காணவில்லை ! -பொலிஸில் முறைப்பாடு
நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் தங்களது உறவுகளுக்காக போராட்டம் நடத்தப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தினை அகற்றியிருப்பது வேதனையளிப்பதாக கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்க தலைவி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த குறித்த கூடாரம் காணாமல் போயுள்ள நிலை தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் அமைப்பின் தலைவி நாகேந்திரன் ஆசா இன்று (04) முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மிக விரைவில் எடுத்து தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மிக விரைவில் எடுத்து தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.




No comments: