ஆலையடிவேம்பில் வருமானம் குன்றிய நிலையில் வியாபாரிகள் கண்டுகொள்ளுமா பிரதேசபை.?
(செல்வி விநாயகமூர்த்தி)
ஆலையடிவேம்பு சாகாம வீதியில் தற்காலிக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளை இடம்மாற்றியதால் தமக்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவிப்பு.
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரிவிற்குட்பட்ட சாகாம வீதியில் காலம் காலமாக தமது பல்வேறுபட்ட உற்பத்தி பொருட்களை வியாரிகள் வீதியின் இரு மருங்கிலும் வியாபார கொட்டகைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் ஆலையடிவேம்பு சாகாம வீதியில் மக்கள் கூட்டம் சமூக இடைவெளியை பின்பற்றாது பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.அதேவேளை ஊரங்கு தளர்த்தப்படும் நாட்களில் சாகாம வீதியில் வாகன நெரிசல் அதிகமாகவே காணப்படுகிறது.
.எனவே இவற்றை கருத்தில் கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முறையை உரிய முறையில் கடைப்பிடிக்கும் நோக்கிலும் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகம், பிதேசசபை,ஆலையடிவேம்பு சுகாதாரவைத்திய அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கொரோனா தொற்று முடியும் வரை சாகாம வீதியிலுள்ள தற்காலிக வர்த்தக நிலையங்கள் யாவும் ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.
ஆனால் ஊரடங்கு நாட்டில் தற்காலிகமாக தளர்த்தப்பட்ட வேளையில் பொருள் கொள்வனவில் ஈடுபடும் இப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் தற்காலிக வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள தர்ம சங்கரி மைதானத்தை தவிர்த்து அக்கரைப்பற்று பொதுச்சந்தையில் முண்டியடித்து பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் தர்மசங்கரி மைதானத்தில் தற்காலிகமாக கடையமைத்து வியாபாரம் செய்ய முன்வந்த வியாபாரிகள் பாரிய பொருளாதார நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதோடு தமது பொருட்களை நுகர்வோர் இல்லாத காரணத்தினால் அழுகிய நிலையில் மாடுகளுக்கு வீசுவதாகவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
தாம் நாளாந்தம் பெறும் சிறுதொகை வருமானத்தையும் இழந்து நிற்பதாகவும் எமது அகத்தியன் செய்திச் சேவைக்கு தெரிவித்தனர். இது தொடர்பில் பிரதேசசபை,மற்றும் ஆலையடிவேம்பு வர்த்தகசங்கம் என்பன கண்டுகொள்ளாது இருப்பது எமக்கு மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே வழமை போன்று தாம் இயங்கிய இடங்களில் மீண்டும் தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை இன்றைய தினம் சாகாம வீதி,மற்றும் ஆலையடிவேம்பு வீதிகளில் வழமைபோல் தற்காலிக கடைகள் இயங்குவதையும் அவதானிக்க முடிந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: