அன்னமலையில் வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களுக்கான நாற்றுக்கள் வழங்கிவைப்பு



செ.துஜியந்தன்

கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அன்னமலை விவசாயப்போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களுக்கு பயனுள்ள நாற்றுக்கள் வழங்கும் நிகழ்வு விவசாயப்போதனாசிரியர் என்.ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் விவசாய தொழிநுட்ப உதவியாளர் யூ.கஜானந் உட்பட விவசாயிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

இங்கு அன்னமலை விவசாயபோதனாசிரியர் பிரிவில் வீட்டுத்தோட்டம் செய்யும் 40 விவசாயிகளுக்கு அவரை, கத்தரி, பசளி, கறிமிளகாய், பீர்;க்கு போன்ற பயனுள்ள நாற்றுக்கள் வழங்கிவைக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments: