“மலையகத்துக்கு விடுதலை வேண்டும்“ மலையக இளைஞன் மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம்



(கனகராசா சரவணன்)
மலையக மக்கள் இதுவரை பட்ட கஷ்டங்களை போக்க நஷ்டத்தில் இயங்கும் தனியார் கம்பனிகளை அரசு பெறுப்பேற்று மக்கள் விவசாயம் செய்ய பகிர்ந்தளிக்க வேண்டும் மலையகத்துக்கு விடுதலை வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து நுவரெலியா பூண்டுலோயலைச் சோந்த இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு ஓளவையார் சிலைக்கு கீழ் உண்னாவிரத போராட்டத்தில் இன்று சனிக்கிழமை (30) ஆரம்பித்து ஈடுபட்டுவருகின்றார்

மட்டக்களப்பு கல்லடி பாலத்;துக்கு அருகில் இருக்கும் இந்த ஓளவையார் சிலையின் கீழ் மலையகத்தின் ஒரு குரல் விடுதலைவேண்டும் என்ற சுலோகம் தாங்கிய நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்

நுவரெலியா மாவட்டத்தில் பூண்டுலோயா டன்சன் கீழ் பிரிவு சேர்ந்த சண்முகம் மகேஸ்காந் என்ற 26 வயது இளைஞரின் தந்தையர் உயிரிழந்துள்ளதாகவும் தாயார் மற்று இரு சகோதரிகளுடன் கடந்த ஜனவரி மாதம் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெயர்ந்து குடும்பத்துடன் வந்துள்ளதாகவும்;

கடந்த 26 வருடங்கள் அந்த கிராமத்தில் தான் வசித்து வந்துள்ளதாகவும் இன்று வரை எவ்விதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை இதனால்; எனது மக்கள் படும் அவலங்கள் கண்ணீர்கள் சொல்லமுடியாதவை

உனக்காகவும் உனது குடும்பதத்துக்காகலும் வாழத் தொடங்கும் போது நீ மனிதனாகின்றாய் நீ உன் குடும்பம் வாழ்வது போல உன் சமூகம் வாழ வேண்டும் என்கின்றபோது நீ உழகை;க தொடங்குகின்ற போது நீ மாமனிதனாகின்றாய் என அறிஞர்களின் கோட்பாட்டு தத்துவங்களின் அடிப்படையில் நான் எனது சமூகத்தை நேசிக்கத் தொடங்கினேன்.


வாக்குகளுக்காக வருகின்ற தலைவர்கள் அதே பாதையில் வருகின்றார்கள் செல்கின்றார்கள் அதேபோல எமது மக்களுக்கு ஏதாவது இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டால் வந்து பார்பதே நிவாரணமே இல்லை உழைப்பிற்கு ஏற்ற ஊதியமில்லை இப்படி பல உள்ளன கம்பனிகளிடம் கேட்டால் நஷ;டத்தில் செல்லுகின்றது என்கின்றனர் இதனை அரசு கேட்கவேண்டும் அல்லது நாங்கள் அனுப்பிய பிரதிநிதிகள் கேட்க வேண்டும் அல்லவா?

நாங்கள் அனுப்பிய ஆறுமுகம் தொண்டமான் தீகாம்பரம் எங்களுக்காக பேசவில்லை பணத்துக்காக பேசினார்கள் கொரோனா நோய் வந்ததன் பின்னர் எங்கள் மக்கள் உழைத்துதான் சாப்பிட்டனர் இங்கு 85 வீதமான உரிமை கிடைக்கின்றது பாதிக்கப்பட்டால் கேட்டு கிடைக்க கூடிய சூழ்நிலை இருக்கின்றது ஆனால் எங்கள் மக்களுக்கு அப்படியல்ல எது எப்படி இடையூறு வந்தால் எங்கள் மக்கள் உழைத்து தான் வாழவேண்டும்

எல்லோரும் முககவசம் போட்டு பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்றனர் எமது மக்கள் பிலாக்காயை மட்டும் உண்டு வாழுகின்றனர் அரசு கொரோன நோயின் பின்னர் வீட்டுத் தோட்டங்கள் செய்யுங்கள் என்கின்றனர் ஆனால் எங்கள் மக்களுக்கு வீட்டுத் தோட்டம் செய்ய இடமில்லை

ஏனைய சமூகம் வாழுவது போல எமது மக்களும் வாழ நிலங்களை பகிர்ந்தளித்து கொடுக்க வேண்டும் மலையக மக்கள் இதுவரைபட்ட கஷ;டங்களை போக்க நஷ;டத்தில் இயங்கும் தனியார் கம்பனிகளை அரசு பெறுப்பேற்று மக்களுக்கு பகிர்ந்தளக்க வேண்டும் எனNவு நீதி கிடைக்கும் வரை இந்த உண்னாவிரத போராட்ம் தொடரும் மாற்றம் என்ற சொல்லைத்தவிர மற்றும் அனைத்தும் மாறிவிடும் என போராட்டகாரர் தெரிவித்தார்.

No comments: