போதை மாத்திரைகளுடன் மூவர் கைது


(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலானாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய புலனாய்வுப் பிரிவினருடன் வாழைச்சேனை பொலிஸார் இணைந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் சனிக்கிழமை (09) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் ஒருவர் ஒன்பது மாத்திரைகளுடன் நேற்று மாலை கைது செய்யப்பட்டளதுடன் மற்றைய  இருவரும் 140 போதை மாத்திரைகளுடன் நேற்றிரவு கைதாகினர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: