கொரோனா அச்சம் வெறிச்சோடி காணப்படும் பள்ளிவாசல்கள் !


(எச்.எம்.எம்.பர்ஸான்)

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைய பள்ளிவாசல்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

முஸ்லிம்கள் ஏனைய மாதங்களை விட ரமழான் மாதத்தில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம்.

அந்தவகையில் மக்கள் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளதால் இம்முறை பள்ளிவாசல்களில் மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடாததன் காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்ட, கல்குடா தொகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களும் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

No comments: