ஊரடங்கு தளர்வு கைதாகும் வாய்ப்புக்கள் அதிகம் மக்கள் அவதானம்
இன்றைய தினம் முதல், நாடுமுழுவதும் இரவு 10 மணிமுதல் ,அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு ,சட்டம் ,அமுலாக்கப்படவுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் சோதனை சாவடிகள் வேகத்தடை என்பன நீக்கப்படுவதுடன் ஊரடங்கு கால அனுமதி பத்திரம் பார்க்கப்படமாட்டாது என் பொலிஸ்தரப்பு அறிவித்துள்ளது.
மேற் குறித்த 10 மணி தொடக்கம் 04 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்கு அனுமதிபத்திரம் பார்க்கப்படுவதுடன் பாதுகாப்பு அரண் வீதித்தடை என்பன கடைப்பிடிக்கப்படும் என பொலிஸ் தரப்பு மேலும் அறிவித்துள்ளது
சமூக, இடைவெளியை, கடைபிடிக்காத நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு ,அமைய, நடவடிக்கை ,எடுக்குமாறு சுகாதார சேவைகள் ,பணிப்பாளர், நாயகத்தினால், பதில் காவல்துறைமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை ,முதல் ,விசேடமாக ,சமூக ,இடைவெளியை, பேணாத நபர்கள் கைது செய்யப்படுவதுடன் ,அவர்களுக்கு 6, மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
சுற்றுலா சபையில், பதிவுசெய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள, அனைத்து விருந்தகங்கள் ,உணவகங்கள் என்பனவற்றில், அங்கேயே வைத்து உணவுகளை ,உட்கொள்வதற்கு ,சுகாதார சேவைகள், பணிப்பாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் சுகாதார அமைச்சு, மற்றும் சுற்றுலா சபை ,என்பனவற்றினால் விதிக்கப்பட்டுள்ள ,நிபந்தனைகளை, கடுமையாக ,பின்பற்றுமாறு விருந்தகங்களின் உரிமையாளர்களுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நாளைமுதல், சமூக இடைவெளியை ,பேணாதவர்களை கைதுசெய்வதற்காக ,சுகாதார சேவைகள் ,பணிப்பாளர் நாயகம், அனில் ஜாசிங்கவினால் ,விசேட ,சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று ,பிற்பகல் இடம்பெற்ற, ஊடக சந்திப்பில் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, இதனைத் தெரிவித்துள்ளார்.
காவல்துறை, தலைமையகம் ,விசேட சுற்றுநிரூபத்தை, வெளியிட்டுள்ளதுடன் அது ,தொடர்பில் அனைத்து, காவல்துறை பொறுபதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது, மக்களுக்கு, இடையிலான சமூக, இடைவெளி தொடர்பில் கண்காணிப்பதற்காக, சிவில் உடையில் காவல்துறையினர் பயன்படுத்தப்படவுள்ளனர்.
இதன்போது, சமூக இடைவெளியை ,பேணாதவர்களின், செயற்பாடுகள் காணொளியாக, பதிவு, செய்யப்படுவதுடன் ,சம்பந்தப்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்படுவர்.
அவ்வாறு சமூக இ,டைவெளியை, கடைப்பிடிக்காதவர்ளுக்கு எதிராக நாளை முதல் கடும், நடவடிக்கை எடுக்கப்படும் என, சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்,, ரோஹன ,தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,விசாலமான மண்டபங்களில், திருமண, நிகழ்வுகளை ஏற்பாடு செய்தாலும் நூற்றுக்கு மேற்பட்டோர், அழைக்கப்படுவது ,சட்டவிரோதமானது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார ,அமைச்சின் ,சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார், சுகாதாரம் மற்றும் உணவு, பாதுகாப்பு பிரதி, பணிப்பாளர் நாயகம்,வைத்தியர் லக்ஷ்மன் கம்லத், இதனை ,தெரிவித்துள்ளார்.
இயன்றளவு, குறைந்த, அளவானவர்களை ,நிகழ்வில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிகழ்வு ,இடம்பெறும், காலப்பகுதியில் சுகாதார ,ஆலோசனைகளுக்கு அமைய நபர்களுக்கு, இடையிலான இடைவெளியை பேணுவது, அவசியம் என்பதால் சாதாரண, நிலையை விட ,மண்டபத்திற்குள்,நுழைவோரின் எண்ணிக்கை 40, சதவீததிற்கும் ,மேற்படாதவாறு ,இருக்க வேண்டும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
No comments: