நாளைய தினம் ! தொடர்பில் விசேட அறிவுறுத்தல்கள் !


நாளையதினம்,  நாட்டின், செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றதாக, பிரதிப் பொலிஸ்மா, அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்,


இதன்போது கொரோனா, ஒழிப்பு நடவடிக்கைக்கே முன்னுரிமை அளிக்கப்படும், என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்,

அரச மற்றும் தனியார் நிறுவன தலைவர்களால், தீர்மானிக்கப்பட்ட அறிவுறுத்தல்களுன்னு, அமைவாக  நாளைய தினம் அரச மற்றும் தனியார், துறை ஊழியர்கள், சேவைக்கு சமூகமளிக்க வேண்டும், என்று அவர் தெரிவித்துள்ளார்.

நேரம் !

அரச சேவை.

அரச சேவையாளர்கள் பயணிக்கும் வாகனங்கள் காலை 8.30க்கு முன்னர், பணியிடங்களுக்கு, பயணிப்பதுடன் மீண்டும்  மாலை 3 , 4 மணிக்கும் இடைப்பட்ட நேர இடைவெளியில், வெளியேறுவது,  பொருத்தமாக இருக்கும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர்,  சுட்டிக்காட்டினார்.

தனியார் ..
மேலும் தனியார் நிறுவன, செயற்பாடுகள் நாளையதினம் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட, உள்ள நிலையில் தனியார நிலைய உத்தியோகத்தர்கள், அவர்கள், பயணிக்கும், வாகனங்கள் காலை 8.30க்கும் காலை 10 மணிக்கும் இடையில் பணியிடங்களுக்கு, பயணிப்பதுடன், மாலை 4 , 5 மணிக்கும், இடைப்பட்ட, காலத்தில், வெளியேறுவது பொருத்தமாக, இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரச மற்றும், தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து செல்லும் வாகனங்கள், மற்றும் அவர்கள் பயணிக்கக், கூடிய வாகனங்கள் இந்த நடைமுறையை, பின்பற்ற வேண்டும் கோரிக்கை விடுப்பதாக, அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பொதுப் போக்குவரத்தின் ஊடாக, தமது அலுவலகங்களுக்கு வருகை, தரும் நபர்களுக்கும், இந்த நடைமுறை பொருந்தாது எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித், ரோஹன சுட்டிக்காட்டினார்.

நாளைய தினம் பணிக்கு, திரும்பும் அனைவரும், தமது நிறுவன அடையாள அட்டை மற்றும் , சேவை அடையாள அட்டை,  உத்தியோகபூர்வ கடிதம் என்பவற்றில், ஒன்றை தம்வசம் வைத்திருப்பது அவசியம், என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

மேற் குறித்த ஆவணங்கள், இல்லாத பட்டசத்தில்,அவர்களிடம் காணப்படும் தேசிய அடையாள அட்டையில், அவர்களது தொழில், பற்றி குறிப்பிடப்பட்டிருத்தல், அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பல்பொருள் அங்காடிகள் மற்றும், குளிர்பான விற்பனை நிலையங்கள் போன்றவற்றை, நாளை முதல், உரிய அறிவுறுத்தல்களுக்கு, அமைய திறக்க முடியும் எனவும், அவர் தெரிவித்தார்.
அனுமதி இல்லை


ஹோட்டல்கள், உணவு விற்பனை நிலையங்களை திறக்க தற்போது அனுமதி இல்லை எனவும் அது குறித்து, தீர்மானம் மேற் கொள்ள,  கலந்துரையாடப்பட்டு, வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இணையம், 
மூலமாக உணவு விநியோக நடவடிக்கையில் தற்போது உள்ள செயற்பாடுகளை, தொடர்ந்தும், செயற்படுத்த, முடியும் என அவர் மேலும், தெரிவித்தார்.

தினசரி மற்றும் வாராந்த சந்தைகள், உடற்பயிற்சி நிலையங்கள், மண்டபங்கள் ஆகியவற்றை, திறக்க அனுமதி கிடையாது, எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அனைத்து சந்தர்ப்பங்களிலும்  பொதுப் போக்குவரத்து மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றில், தனிமைப்படுத்தல், சட்டங்களுக்கு அமைவாக செயற்பட, வேண்டியது, அவசியம் எனவும் பிரதிப் பொலிஸ்மா, அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி பேணப்படுவதுடன் மற்றும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சட்டதிட்டங்களை மீறி நடப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: