மலையகம் எங்கும் மறைந்த அமைச்சருக்கு அஞ்சலி நிகழ்வுகள்


(கேதீஸ்)
இலங்கைத், தொழிலாளர் காஸ்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவை, கேட்டு மலையக மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தலவாக்கலை,கிறேட்வெஸ்டன்,வட்டகொடை, போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த தோட்ட, தொழிலாளர்கள் இன்றைய, தினம் தொழில்களுக்கு செல்லவில்லை., அரசியல் பேதங்களுக்கு ,அப்பால் மலையக சமூகத்திற்கு தலைமைக்கொடுத்த ஆளுமைமிக்க ஒரு, தலைவனை இழந்த சோகத்தில் இத்தோட்டப் பகுதிகள், தலவாக்கலை,வட்டக்கொடை ,நகரங்கள் காட்சியளித்தன,.எல்லாப் இடங்களிலும், ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படங்களை ,வைத்து மாலை ,அணிவித்து விளக்கேற்றி தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர். 

மலையக நகரங்கள், தோட்டப்பகுதிகள், வீடுகள், பொது இடங்கள் ,போன்ற எல்லாம் இடங்களும், வெள்ளைக்கொடிகள் ,பறக்கவிடப்பட்டுள்ளன., கட்சி, தொழிற்சங்க, பேதங்களுக்கு அப்பால் ,அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
No comments: