கிழக்கு | திருக்கோவில்-தாண்டியடி பிரதேசத்தில் உபதபாலகம் இன்மையால் மக்கள் அவலம்


(அகத்தியன் செய்திப்பிரவு)


நடவடிக்கை எடுக்குமா அரசாங்கம் ?

அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தாண்டியடி கிராம மக்கள் தங்களது தபால் சேவையினை பெற்றுக் கொள்ள சுமார் 12 கி.மீ துரம் சென்று திருக்கோவில் தபால் நிலையத்தில் தங்களது தபால் தேவையினை பூர்த்தி செய்யும் நிலை காணப்படுகின்றது.



குறித்த கிராமத்தில் உப-தபாலக வசதி இன்மையே இந் நிலைக்கு காரணம் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

வெயில் காலத்திலும் சரி மழை காலத்திலும் சரி  எங்களது  தபால் சேவையை பூர்த்தி செய்ய நாங்கள் இங்கிருந்து சுமார் 12 கி.மீற்றர் பயணிக்கின்றோம் .

இது தொடர்பில் மேலும்..

கடந்த 1990ம் ஆண்டு யுத்தத்தினால் இக் கிராம மக்கள் இடம் பெயர்ந்து (விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில்) போன்ற பிரதேசங்களில் தங்களது உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்துள்ளனர்.

இதன் பின்னர் 1995ம் ஆண்டு  தாண்டியடி பிரதேசத்தில் மக்கள் மீள் குடியேறியதனையடுத்து  புனர்வாழ்வு அமைச்சினால் தாண்டியடி பிரதேச மக்களுக்காக உப-தபாலக  கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டிருந்தது.


இருப்பினும் தபால் சேவைக்கான முன்னாயத்தங்கள் இடம் பெற்றபேது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் இக் கட்டிடம் சென்றமையால் உப-தபாலகம் திறக்க முடியாமல் போனதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

2009ம் ஆண்டு காலப்பபகுதியில் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் குறித்த கட்டிடம் இராணுவத்தினரின் பிடியில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படுள்ளது.

இதன் பின்னர் பிரதேச மக்களினால் பலதரப்பட்ட தரப்பினரிடம் இது குறித்து தெரிவித்தும் இது தெடர்பில் எது வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமையை இட்டு மக்கள் கவலையடைந்துள்ளனர்.

தாண்டியடி பிரதேசத்தில் உயர் கல்வியினை பெறும் மாணவ மாணவியர்களும் அரச உத்தியோகஸ்தர்களும் காணப்படுகின்றனர். இவர்களது தபால் தேவை இங்கு ஒரு கேள்விக்குறியாக காணப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.

குறித்த பிரதேசத்தில் தபலகம் இன்மையால்

 தாண்டியடி 231 குடும்பங்களும், (நேருபுரம் 49 குடும்பங்கள் உள்ளடங்கலாக)

சங்கமன்கிராமம் 320 குடும்பங்களும்,  (உமிரி  108 குடும்பங்கள் உள்ளடங்கலாக)

தங்கவேலாயுதபுரம்,  235  குடும்பங்களும்

காஞ்சிரம்குடா 161 குடும்பங்களும், (ஸ்ரீவள்ளிபுரம்  90 குடும்பங்கள் உள்ளடங்கலாக)

மேலும் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சங்கமன் கண்டி கிராம சேவகர் பிரிவில் உள்ள 251 குடும்பங்களும்

மொத்தமாக ஆயிரத்து  198 குடும்பங்களை சேர்ந்த இரண்டாயிரத்து 878 பேரும் வாக்களிக்க தகுதி பெற்ற ஆயிரத்து 951 வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் மக்கள் நலன் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது அதுவும் பலனளிக்கவில்லை தற்போதுள்ள அரசாங்னமானது எங்களது நலனில் அக்கறை செலுத்தும் என்று நம்புகின்றோம் என்று தெரிவித்தார்.


வயேதிபர்கள் 250 ரூபாய் அரசாங்க கொடுப்பனவை பெறுவதற்கு  பஸ்ஸில் பிரயாணித்து  12 கி.மீற்றர்  தபால் நிலையம் செல்கின்றமை வேதனையளிக்க கூடிய ஒரு விடையமாக காணப்படுகின்றது.

இதற்கான தீர்வை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திலெடுத்து உப-தபாலக வசதியை ஏற்படுத்தி கிராம மக்களின் குறையை நிவர்த்தி செய்யும் படி கிராம மக்கள்தெரிவித்தனர்.


இருப்பினும் குறித்த கட்டிடம் தற்போது பழடைந்த நிலையில் சிதைவடைந்து காணப்படுகின்றமையை எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது

தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்கு கேட்டு  இங்கு அரசியல்வாதிகள் வருவதாகவும் பின்னர் மக்களின் குறை கேட்ட யாரும் வருவதில்லை என்றும் கவலை வெளியிட்டனர்.

இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வனிடம் அறிவித்திருந்தோம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார் ஆனாரல் தீர்வு கிடைக்கவில்லை என்றும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.



No comments: