ஆஸ்கர் விருதுகளின் விதி மாற்றம் செய்யப்பட்டது !


திரையுலகின் கௌரவமிக்க விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகின்றது ஆஸ்கார் விருதானது  24 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.


வரும் அடுத்த ஆண்டில் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆஸ்கர் விருது நிகழ்ச்சி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக திரைப்படங்களை வெளியிடும்  திரையரங்குகள் மூடப்பட்டு விட்டதால்  படங்களை நேரடியாக OTT தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இதுபோன்ற OTT தளங்களில் வெளியிட்டு  படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற அச்சமும் சந்தேகங்களும் நிலவி வந்த நிலையில்.

ஆகக்குறைந்தது திரையரங்கில் வெளியிடப்பட்டு  ஒரு வாரமாவது  ஓடிய படங்களைத்தான  ஆஸ்கருக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற விதி ஒன்று உள்ளது

 கொரோனா வைரஸ் காரணமாக குறித்த விதியில் ஆஸ்கர் குழு தற்காலிகமான  மாற்ங்களை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றங்களின் அடிப்படையில்  நேரடியாக இணையத்தளங்களில் வெளியாகும் படங்களையும் ஆஸ்கர் விருதிற்கு அனுப்பி வைக்க முடியும்.

குறிப்பாக  அந்த படங்கள் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்ட படங்களாக இருக்க வேண்டும் என்பதுடன் நேரடியாக இணையத்தளங்களில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட படங்களாக இருக்கக்கூடாது என்பது சுட்டிக்கபட்டத்தக்கது.

இந்த விதிமுறை தளர்வு தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: