மட்டக்களப்பில் கொரோனா இதுவரை எவருக்கும் இல்லை - எம். அச்சுதன்


-கனகராசா சரவணன்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றுவரை எவருக்கும் கொரோன தொற்று இல்லை அதேவேளை இன்று வரை தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட 62 பேருக்கு தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய கலாநிதி எம். அச்சுதன் தெரிவித்தார்.

சுகாதார பணிமனையில் நேற்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தாh.;

தற்போது உலகலாக ரீதியில் கொவி 19 வைரஸ் தாக்கம் அதிகரித்துவருகின்றது இதன் அடிப்படையில் இலங்கையில் இந்த தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக தேசிய மட்டத்தில் சகல ஏற்பாடுகளும் ஜனாதிபதி தலைமையில் செய்யப்பட்டு செயலணி உருவாக்கப்பட்டு இதற்கு தேவையான மிகவும் காத்திரமான முடிவுகள் எடுக்கப்பட்டு எங்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.

 இதனை மட்டக்களப்பு மாவட்ட சுகாதார திணைக்களம் உன்னிப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்த செயற்பாட்டின் காரணமாக மட்டக்களப்பில் எதுவித கொரோனா தொற்று நோய் பரவாதவாறு தடுப்பு நடவடிக்கையினால் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றோம்.

இந்த மாவட்டத்தில் ஆரம்பத்தில் லண்டனில் இருந்துவந்த ஒருவருக்கு தொற்று கண்டுபடிக்கப்பட்டு அவருடன் கூட இருந்த 159 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதுவிதமான தொற்றும் இல்லாத நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை அந்த காலப்பகுதியில் வெளிநாடுகளில்; இருந்து வந்த பலபேர் தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எவருக்கும் நோயோ தொற்றே இதுவரையும் இனங்கானப்படவில்லை

மேலும் தொற்று நாட்டில் அதிகரிக்கலாம் என்ற அடிப்படையில் அரசாங்கம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை தேர்ந்தெடுத்து அதனை நோய்க்கான மருத்தவ சிகிச்சை பிரிவாக உருவாக்குமாறு எங்களுக்கு சுகாதார திணைக்களம் ஏப்பில் ஆரம்பத்தில் அறிவுறுத்தப்பட்டது அதற்கமைய அதனை துரிதமாக செய்தோம்

புனானை தடுப்பு முகாமில் தடத்துவைக்கப்பட்டிருந்த பண்டாரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 58 பேரும் கல்முனை தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜாஎல பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேர் உட்பட நோய் தொற்று இனங்காணப்பட்வர்களாக 62 பேர் நேற்றை வரைக்கும் அனுமதிக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை உன்னிப்பாக மருத்துவ அதிகாரிகள் குழாம் பராமரித்துவருகின்றது.

இந்த வைரஸ் தொடுகையினாலும் தும்மல் இருமல், பேசும் போது வருகின்ற துளிகளால் தான் மாத்திரம் தொற்றுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது அதேவேளை காற்றால் பரவுகின்றது என இதுவரை எந்;தவொரு அறிவித்தலும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறத்தவில் எனவே காற்றால் இது தொற்றாது. 

இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோன வைரஸ்சை கண்டறியும் பி சி ஆர் பரிசோதனை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது இதில் புனானை தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளி மாவட்டங்களைச் சோந்த 141 பேருக்கு பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றை தடுக்கின்ற செயற்பாட்டிலே நாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் நாங்கள் அனைவரும் டெங்கு நோயை மறந்துவிட்டோம் இருந்தபோதும் சில இடங்களில் டெங்கு நோயாளர்கள் வந்துள்ளதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

 கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் எமது அதிகாரிகள் மிகவும் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் அதனால் எமது பலம் அதில் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றது

அதனால் பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் தற்போது நீங்கள் வீட்டிலே அதிகமாக இருப்பதால் உங்கள் வீடு மற்றும் சுற்றுச் சூழலையும் சுத்தமாக வைத்து டெங்கு நோய் பரவாமல் பாதுகாத்துக் கொள்ளுமாறு தெரிவித்தார்

No comments: