ஊரடங்கு தொடர்பான அறிவுறுத்தல்


மீள் அறிவித்தல் வரையில் கொழும்பு மற்றும் ஹம்பகா மாவட்டங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 ஞயிற்றுக்கிமை மற்றும் 25 திங்கட்கிழமை இரண்டு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் ஹம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று இரவு 08 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம்  26 செவ்வாய்க்கிழமை காலை 05 மணிவரை நீடிக்கும்.

நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரிதியில் ஊரடங்கு ஆமுல்படுத்தப்படவுள்ள நிலையில் 900 தடுப்புக்களை அமைக்கவுள்ளதாக பிரதி காவல்மா அதிபர் அஜித் ரோகாண தெரிவித்துள்ளார்.

தெற்கு சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை குறிப்பிட்டள்ளார்.

மேலும் ஊரடங்கு, அமுல்படுத்தப்பட்டுள்ள மார்ச் 20,ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 62 ஆயிரத்து 162, பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

17 ஆயிரத்து 460 வாகனங்களும் பொலிசாரால், கைப்பற்றப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவினை மீறிய 19 ஆயிரத்து 992, பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது


No comments: