வாழைச்சேனை பொலிஸாரினால் மதிய உணவு வழங்கி வைப்பு.


(எச்.எம்.எம்.பர்ஸான்)

வெசாக் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸாரினால் கிராமப்புற மக்களுக்கு மதிய உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாகனேரி, பொண்டுகள் சேனை, மூக்கர்ற கல் ஆகிய கிரமா மக்களுக்கு இவ்வுணவு பொலிஸாரினால் இன்று (7) வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வாறு சமைத்த உணவுப் பொதிகளை வழங்கி வைத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றிகளைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: