மட்டு- கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
-கனகராசா சரவணன்-
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு களப்பு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (01) பிற்பகல் 4 மணியளவில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட்டு ஆயிரம் லீற்றர் கோடா மறு;றும் கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களை மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய தாண்டியடி விசேட அதிரடிப்படையினரும், கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் இணைந்து இன்று மாலை குறித்த பிரதேசத்திலுள்ள களப்பு பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்து சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்
இதன்போது, 2 பரல்;களில் சுமார் ஆயிரம் லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் அடுப்பு, கோஸ் சிலின்டர் உள்ளிட்ட உபகரணங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: