நீடிக்கப்பட்டது ஊரடங்கு !


கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம்  மாவட்டங்கங்கள் தவிர்ந்து ஏனைய
மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டமானது எதிர்வரும்  6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்பு மே 4 ஆம் திகதிவரை அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டமானது தற்போது மே 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

மே 6 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டமானது அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

அதேவேளை மே 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் மே 11 ஆம் திகதி காலை 5 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கம்பஹா களுத்துறை  புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனடிப்படையில்  மே 11 ஆம் திகதி முதல் குறித்த மாவட்டங்களில் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

No comments: