ஊரடங்கு சட்டத்தினை மீறியவர்களது தொகை சடுதியாக அதிகரிப்பு !


கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில ஆயிரக்கணக்கானோல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளுடன் பெருமளவிலான வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்தவகையில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 4,4000 (நாற்பத்தி நான்காயிரம் பேர் ) கைது செய்யப்பட்டுள்ளனர்.

11,460 (பதினொராயிரத்து நானுாற்று அறுபது) வாகனங்களும்  பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 20ம் திகதி முதல்ஊரடங்கு சட்டத்தினால் வீடுகளுக்கு செல்லமுடியாமல் கொழும்பில் தங்கியிருந்த சுமார் 370 பேரை தங்களது சொந்த வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments: