சஹ்றான் காசீம் பெண்களுக்கு பயிற்சியளித்ததாக சந்தேகிக்கப்படும் இடமொன்றில் தேடுதல்
அகத்தியன் Selfie உலா விரைவில் (இது உங்களுக்கானது)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பாலமுனை பிரதேசத்திலுள்ள வாடகை விடுதியொன்றில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஸஹ்றான் காசீம் பெண்களுக்கு பயிற்சியளித்ததாக சந்தேகிக்கப்படும் இடமொன்றை இன்று(08.05.2020) வெள்ளிக்கிழமை பிற்பகள் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ததுடன் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பாலமுனை பிரதேசத்திலுள்ள வாடகை விடுதியொன்றே இதன் போது சோதனைக்குட்படுத்தப்பட்டன.
குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த விடுதியின் காணி மற்றும் விடுதிக் கட்டிடம் என்பன முழுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் விசாரணைகளிலும் ஈடுபட்டனர்.




No comments: