தமிழ் தேசிய கூட்டமைப்பு இனி தமிழ் மக்களுக்கு தேவையில்லை


(கனகராசா சரவணன்)

முள்ளிவாய்க்காலுக்கு, பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஜயாவும் கட்சியின் ஊடக, பேச்சாளர் சுமத்திரன் தமிழ் மக்களின் போராட்டத்தை இன்று நேற்று, அல்ல கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கொச்சைப்படுத்தி வந்துள்ளன,ர் மக்கள் அறிவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மட்டு இணைப்பாளர், தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்

மட்டக்களப்பு கண்ணகையம்மன், ஆலைய வீதியிலுள்ள, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, கட்சி காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

தமிழ் தேசிய, கூட்டமைப்பின ஊடக ,பேச்சாளர் எம். சுமத்திரன் தென் பகுதியிலுள்ள சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய, செவியில் தமிழ் மக்களுடைய தேசிய தலைவர், பிரபாகரன், ஆயுதம் ஏந்தியது தவறு எனவும் அதனை நான், ஏற்கமாட்டேன் எனவும் கூறியுள்ளார்

அதன், பிற்பாடு முகநூல் மற்றும், ஊடகங்கள் ஊடாக, அதே தமிழ் தேசிய கூட்டமைப்பை, சேர்ந்த உறுப்பினர்கள், சுமத்திரனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

உண்மையிலே ஒரு, வேடிக்கையான, விடயம் இவர் இந்த விடயத்தை தெரிவித்திருப்பது, புதிய விடயமல்ல முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன், ஜயா அதன் ஊடக பேச்சாளர் சமத்திரன், ஆகியோரது கடந்தகால நடவடிக்கைகள், யாவுமே தமிழ் மக்களுடைய சுதந்திர போராட்டம் ,தவறான பாதை எனவும் ஆயுத ஏந்தியது தவறானது என பல, தடவைகளிலே கூறிவந்துள்ளனர், இவர்களது நிலைப்பாட்டை நாங்கள் கடந்த 10 வருடங்களாக மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தோம்.

தமிழ், மக்களின் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் முகமாக பல வெளிநாட்டு சக்திகள் கருத்து தெரிவித்து வந்த, போது அதனை,அரசோடு சேர்ந்து அவர்களை பல, சந்தர்ப்பங்களில் மழுங்கடித்துள்ளனர்

ஜ.நா. மனித உரிமை, பேரவைகளிலே கடந்த காலத்தில் அரசுக்கு கால அவகாசம் பெற்றுக் கொடுத்தது, இந்த போராட்டத்தை மழுங்கடிக்க செய்வதற்காகவே எங்கள் போராட்டத்தையும் அந்த பேரிலே பாதிக்கப்பட்டிருந்த, தமிழினத்தையும் அந்த பேரிலே அங்கங்களையும் அவையங்களையும் இழந்துள்ள முன்னாள் போராளிகள் பாதிக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களது, வலிகளையும் கொச்சைப்படுத்தி வீணடிக்கும் செயற்பாடாகவே கடந்த காலங்களில் அவர்களது, செயற்பாடுகள் இருந்தது

எனவே எங்களை. பொறுத்த மட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது இனிமேல் தமிழ் மக்களுக்கு, தேவையில்லை அதற்காகவே மாற்று தலைமைத்துவமாகவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று செயற்பட்டுவருகின்றது, என்பதை மக்கள் இனியாவது விளங்கி கொள்ளவேண்டும்.

மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் பொங்கியெழுந்து அதில் உள்ள உறுப்பினர்கள் கண்டிக்கின்றார், என மக்களை பேக்காட்டாமல் மக்களிடம் இருந்து, வாக்குகளை பெறுவதற்காக சுமந்திரனை ஓரம் கட்டிவிட்டு, ஏனை யோருக்கு, வாக்களிங்கள், என நாடகத்தை அரங்கேற்றாமல், இனிமேலாவது எங்களுடைய தமிழ் மக்கள் போராடினது உரிமைக்கான போராட்டம் என்பதை உணர்ந்து செயற்படவும்

இதற்கெல்லாம் முற்றப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த அரசோடு சேர்ந்து அரசின் நிகழ்சி, நிரலுக்கு ஏற்றவாறு இவர்கள் கடந்த காலங்களில் செயற்பட்டுள்ளனர்.

 எனவே மக்கள் நன்கு, உணரவேண்டும் எங்கள் தலைவர் மேதகு, பிரபாகரன் மனிதாபமான, செயற்பாடு என்பது யுத்த காலங்களிலே புலிகளிடம் சரணடைந்த, இராணுவத்தினரை எவ்வாறு, அவர்களை அவர்களது குடும்பத்திடம், கையளித்தார், என்பதை ஊடகங்கள், மூலம் மக்கள் உணர்ந்தவர்கள், அவரைப்போல, ஒரு தலைவரை, இந்த தமிழினம் காணமுடியாது தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை உலகத்துக்கு பறைசாற்றிய மாபெரும் தலைவர்

தமிழனமம் போராடி, வீரத்தின் வாயிலாக பலமிக்க சுதந்திர விடுதலைப் போராட்ட இயக்கம் என, உலகத்துக்கு, பலமுறை பறைசாற்றியதன் மூலமாகவே இந்த அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு, அடிபணிந்து வந்தது அந்த பேச்சு வார்த்தையில், ஈடுபடுவதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இதன், மூலம் தான் தங்களுக்கு எற்ற சுகபோக வாழ்க்கைகளை சுமத்திரன் போன்றோர் கோடான, கோடி சலுகைகளை, பெற்றுக கொண்டதை யாரும் மறுக்க முடியாது, எனவே தமிழர்கள் ஆகிய நாம் விழிக்காவிட்டால், இந்த இலங்கைத் தீவிலே தமிழ் மக்களின், இருப்பை, தக்கவைக்க முடியாது என ஆணித்தரமாக, தெரிவிக்கின்றோம்என்றார்

No comments: