கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் க.பொ.தசாதாரணதரப்பரீட்சையில் 73 வீதமான மாணவர்கள் சித்தி
இம்முறை நடைபெற்ற க.பொ.த.சாதாரணதரப்பரீட்சை பெறுபேறுகளின் படி பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் இரு மாணவர்கள் 9ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் சித்தி வீதம் 73.5 வீதமாக அதிகரித்துள்ளதாக வித்தியாலய அதிபர் ச.கணேஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கமைய சிறப்புபெறுபேறுகளான 9ஏ சித்திகளை குணசுந்தரம் ஹரிசிவன், ரமேஸ் அகிஷன் ஆகியோர் இர மாணவர்கள் பெற்றுள்ளனர். 8ஏ, 1பி சித்திகளை ஜெயராசா கிஷானி, ஜெயராசா கிருத்திஷா, ராஜன் சதுர்ஷிகா ஆகிய மூன்று மாணவர்களும், 8ஏ, 1சி சித்திகளை மகேந்திரதாஸ் டியுமிகா, பிரபாஸ்கரன் விதுர்ஷிகா ஆகிய மாணவர்களும், 7ஏ, 1பி, 1சி சித்திகளை ஜெயசீலன் தனுஸ்காந், மனோகரன் விதுஷாத்;, சௌந்தரராஜன் பவிஷாலினி ஆகிய மாணவர்களும் பெற்றுள்ளனர்.
இம்மாணவர்களின் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு அயராது சேவையாற்றிய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வலயக்கல்விப்பணிப்பாளர், பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், மாகாணக்கல்விப்பணிப்பாளர், உள்ளிட்ட அனைவரையும் கோட்டைக்கல்லாறு கல்விச் சமூகம் நன்றியுடன் பாரட்டுகின்றது

No comments: