பயங்கரவாத காலப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரிக்கு வீடு தேடிச் சென்று 4 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கிவைப்பு
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
பயங்கரவாத காலப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான கல்முனை பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக வீடுதேடிச் சென்று உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு (04) இடம்பெற்றது.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மருதமுனையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எம்.எஸ்.தௌபீக் என்பவர் 2001 ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வழமை போன்று கடமைக்கு செல்லும் போது மருதமுனை பிரதான வீதியில் வைத்து ஆயுததாரிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார். பின்னர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
எனினும் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் அடுத்தவரின் உதவியின்றி வாழ முடியாத துர்பாக்கிய நிலைக்குள் இவர் தள்ளப்பட்டுள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் கல்முனை பொலிஸ் நிலையம் பல்வேறு உதவிகளை அவ்வப்போது இவருக்கு வழங்கிவருகின்றன.
நேற்று இவரது வீடு தேடிச்சென்ற பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் நவீன கட்டில், சக்கர நாற்காலி,மெற்ரஸ், காற்று அடைக்கப்பட்ட மெற்ரஸ் என சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்கிவைத்தனர்.
நேற்று இவரது வீடு தேடிச்சென்ற பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் நவீன கட்டில், சக்கர நாற்காலி,மெற்ரஸ், காற்று அடைக்கப்பட்ட மெற்ரஸ் என சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்கிவைத்தனர்.
இந்த உபகரணங்களை பெற்றுக் கொண்ட தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரி கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த, பொலிஸ் திணைக்களத்திற்கு நன்றிகளை தெரிவித்தார்.


No comments: