மட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கை மீறி 49 பேர் கைது !
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 6 மணி தொடக்கம் சனிக்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலயத்தில் கசிப்பு மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 49 பேரை கைது செய்துள்ளதாக இன்று சனிக்கிழமை (09) பொலிஸ் உயிர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் கசிப்புடன் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் ஒருவரும், களுவாஞ்சிக்கு பொலிஸ் பிரிவில் ஒருவரும், கரடியனாறு பொலிஸ் பிரிவில் ஒருவரும் , கல்குடா பொலிஸ் பிரிவில் ஒருவரும் வாகரை பொலிஸ் பிரிவில் ஒருவரும், வவுணதீவு பொலிஸ் பிரிவில் ஒருவரும் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஒருவருமாக 7 பேரை கசிப்புடன் கைது செய்துள்ளனர்.
அவ்வாறே ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய வெள்ளாவெளி பொலஜஸ் பிரிவில் 4 பேரும், கரடியனாறு பொலிஸ் பிரிவில் ஒருவரும், வாகரை பொலிஸ் பிரிவில் 9 பேரையும், வவுணதீவு பொலிஸ் பிரிவில் ஒருவரும் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 2 பேரும் மட்டக்களப்பு தலைமையக பொலஜஸ் பிரிவில் 4 பேரும் ஆயித்தஜய மலை பொலிஸ் பிரிவில் 7 பேரும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 10 பேரும், காத்தான்கடி பொலிஸ் பிரிவில் 4 பேர் உட்பட 42 பேரை கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments: