ஒரு மாத காலம் கொழும்பில் வலம் வந்த நோய் தொற்றாளர் 1030 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்த நடவடிக்கை !
இன்று கொரோனா வைரஸ் காரணமாக 09வது மரணமாக பதிவாகியுள்ள கொழும்பு 15ஜ சேர்ந்த பெண் கடந்த ஒரு மாத காலமாக உடல் சுகயீனமுற்ற நிலையில் காணப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கொடை (டி.எச்.ஜ) வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பின்னர் பெண்ணின் உடல் நிலை அதிகம் பாதிக்கப்படது அங்கொடை (டி.எச்.ஜ) வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட நிலையில் குறித்த பெண் இன்று உயிரிழந்துள்ளார்.
மேலும்..
இந் நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த குறித்த பெண் வசித்த பகுதியில் உள்ள 1030 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜியமுனி தெரிவித்துள்ளார்.
குறித்த தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள அனைவருக்குமான PCR பரிசோதனைகள் நாளை நடைபெறவுள்ளதாகவும் கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

No comments: