இலங்கையில் கொரோனா வைரஸ் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு !
இலங்கையில் கொரோனா வைஸ் தொற்றாளர்கள் 690 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வைரஸ் தொற்றினால்
குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது.
அந்தவைகயில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து (10) பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதுவரையில் 172 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சு இத் தகவலை தெரிவித்துள்ளது
மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments: