பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய இடங்களிலுள்ள சலூன் நிலையங்களில் சுகாதாரப்பாதுகாப்பு !



(செ.துஜியந்தன்)

கல்முனைப் பிரதேசத்தில் இயங்கும் சிகையலங்கார நிலையங்களின் சுகாதாரபாதுகாப்பு தொடர்பாக பிரதேச பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் நேரடியாக சென்று ஆராய்ந்து உரிமையாளர்களுக்கு சுகாதாரபாதுகாப்பு வழிகாட்டல்களை வழங்கிவருகின்றனர்.

இன்று பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய பகுதிகளில் இயங்கும் சிகையலங்கார நிலையங்களுக்குச் சென்ற பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள். அங்கு கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள். 

மருதமுனையைச் சேர்ந்த பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களான ஐ.எல்.எம்.இத்திரிஸ், ஜே.எம்.நிஜாமுதீன் ஆகியோர் தங்களது பிரிவிற்குட்பட்ட சிகையலங்கார நிலையங்களுக்கு இன்று நேரடியாக விஜயம் மேற்கொண்டிருந்தனர்.


முகக்கவசம் அணியாது சிகையலங்காரம் செய்யவருகைதந்தவர்கள் பொதுச் சுகாதாரப்பரிசோதகரினால் திருப்பியனுப்பிவைக்கப்பட்டார்கள். தற்போது கல்முனைப் பிரதேசத்தில் இயங்கும் சிகையலங்கார நிலையங்களில் முடிமட்டும் வெட்டும் வெட்டிக்கொள்ளப்படவேண்டும், முகச்சவரம் செய்தல் மற்றும் மசாஜ் செய்தல் போன்ற அழகுபடுத்தும் செய்றபாடுகள் நடைபெறக்கூடாது, புதிதாகவருபவர்களுக்கு முடிவெட்டக்கூடாது, முடிவெட்டிக்கொள்பவர்கள் தங்களுக்கு மேல் போர்த்திக்nhள்ளும் போர்வையை கொண்டுவருதல் வேண்டும், அனைவரும் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும், முடிவெட்டும் உபகரணங்கள் தொற்று நீக்கம் செய்யப்படவேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் சுகாதாரப்பணிமனையினூடாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: