ஊரடங்கு தளர்வு தொடர்பான விசேட செய்தி !



கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை அம்பாறை ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் பகுதியளவில் தளர்த்தப்படும்.

அதன்படி 18 மாவட்டங்களுக்குமான ஊரடங்கு சட்டம்  20 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

கொழும்பில் கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ், பம்பலப்பிட்டி, கெசெல்வத்த, மருதானை, கொதடுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை மற்றும் கொஹூவலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட மாட்டாது.

கம்பஹா மாவட்டத்தில், ஜாஎல, கொச்சிக்கடை மற்றும் சீதுவை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், மாரவில, வென்னப்புவ ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கமயில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

மேலும் வரக்காபொலை, அக்குரண, அலவத்துகொட, அக்கரைப்பற்று ஆகிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

இந்த நடைமுறை மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும்.

(ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செய்தி)





No comments: