ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்களில் மாத்திரமே அடையாள அட்டை அனுமதி !
தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கங்களின் அடிப்படையில் மக்கள் வெளியில் செல்வதற்கான அனுமதி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் இடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
அதனடிப்படையில் ஊரடங்குச் சட்ட தளர்வு ஏற்படுத்தப்படும் இடங்களில் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த தேசிய அடையாள அட்டை முறைமை அறிமுகப்படுத்தப்படுகின்றது.
அடையாள அட்டை அனுமதி தொடர்பிர் பூரணமான விளக்கம் !
கீழுள்ள லிங்கை அழுத்தவும் ...
ஊரடங்கு நடைமுறையில் உள்ள இடங்களில் உள்ளவர்கள் தவிர்க்க முடியாத, இன்றியமையாத, தேவைகளின் பொருட்டு வீட்டை விட்டு வெளியேறி மருந்தகங்களுக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டாலும் இந்த அடையாள அட்டை முறைமையின் அடிப்படையிலேயே செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டுக்கு மிக அருகாமையில் திறந்து இருக்கும் மருந்தகங்களுக்கே இந்த நடைமுறையூடாக செல்ல முடியும்.
இந்த அடையாள அட்டை முறைமையை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் இடங்களில் பின்பற்றப்படவே நடைமுறைக்கு வருகின்றது என்பதனை மக்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு அனுமதியை மக்கள் உரிய முறையில் பாதுகாக்குமாறும் உரிய காரணங்கள் இன்றி ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகாப்பிரிவு தெரிவித்துள்ளது.





No comments: