சௌபாக்கியா வீட்டுத்தோட்ட வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை, கல்முனை பகுதிகளில் விதைபொதிகள் வழங்கப்பட்டன


(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை பிரதேச செயலகத்தின் கீழுள்ள மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை சமூர்த்தி பயனாளிகளின் குடும்பங்களுக்கான விதைப் பக்கட்டுக்களை இலவசமாக வழங்கிவைக்கும்  நிகழ்வு நேற்று (22.04.2020) மருதமுனை சமூர்த்தி வங்கி அலுவலகத்தில் நடைபெற்து.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம், வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.முபீன் உட்பட அதிதிகள் கலந்து கொண்டு சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் வீட்டுத் தோட்ட பயிர் செய்கைக்கான விதைகளை கையளித்தனர்.

அதே வேளை 

சௌபாக்கியா எனும் 10 லட்சம் வீட்டுத்தோட்டங்களை அமைப்போம் எனும் தொனிப்பொருளில் அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டம் தேசியரீதியில் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய சம்மாந்துறை விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு (23) சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்தில் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.எல். பௌசுல் அமீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் எச்.எம்.சாஜித், விவசாய போதனாசிரியர்களான எம்.ஏ.எப். நுசைரா,கே.ஆர்.எப்.இம்லா தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான ஏ.ஆர்.எம். இர்சாத் ரி.ஜனனன் மற்றும் விவசாய குழுத்தலைவர்களும் வீட்டுத்தோட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது வீட்டுத்தோட்ட செய்கையாளர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விதைப்பொதிகள் வழங்கப்பட்டன. நெற்பயிர்ச்செய்கையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வயல் நில வரம்புகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளவென பயிர் விதைப்பொதிகள் இலவசமாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.










No comments: