கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு விஷேட கடிதம் !


பாடசாலைகளுக்கு அருகிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்பு அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் அடங்கிய கடிதத்தை விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை அதிபர்களின் தலைமையில் பெற்றோரின் உதவியுடன் பாடசாலைகளை சுத்தம் செய்வதற்கான சிரமதானமும் இடம்பெறவுள்ளது.

No comments: