இன்று அம்பாறை- மட்டக்களப்பு பொதுபோக்குவரத்துசேவை நடைபெறவில்லை


(செ.துஜியந்தன்)

இன்று(28) ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் மிககக்குறைந்தளவிலே காணப்பட்டது.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பொதுப்போக்குவரத்துச் சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை.

கல்முனை பொது பஸ் நிலையத்தில் அம்பாறை மாவட்டத்திற்கான உள்ளுர் சேவைகள் மாத்திரம் இன்று நடைபெற்றதுடன் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான எந்தவொரு சேவையும் முன்னெடுக்கப்படவில்லை. 

பயணிகள் ஒரு ஆசனத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஏற்றப்பட்டு பயணிகள் பஸ் சேவை நடைபெற்றுவருவதாக கல்மனை பஸ் நிலையத்தின் நேரமகாமையாளர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

இன்று கல்முனை பஸ் நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டமை காணக் கூடியதாக இருந்தது.

#SriLanka, #lka, #Ampara, #CTBSriLanka, #SLCTB

No comments: