சமூக வலைத்தள செய்திகளும் ஊடகமும் !


(வடிவேல் டினேஸ்)
ஊடகவியலாளர்

இக் கட்டுரையின் நோக்கம் உண்மைத்தன்மை பற்றியதாக அமைகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எமது நாட்டில் கொவிட்-19 குடும்ப வகையினை சேர்ந்த கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக  நாட்டின் அவசர கால நிலையினை கருத்தில் கொண்டு அரசாங்கம் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை அமுல் படுத்தியிருந்தமை நாமறிந்த விடையமாகும்.


இதேவேளை பல துறையினருக்கு அரசாங்கம் ஊரடங்கு வேளையில் கடைமையில் ஈடுபட அனுமதியளித்திருந்தது (குறிப்பாக ) ஊடகத்துறையினருக்கும் செய்தி சேகரிக்க ஊரடங்கு நேரத்தில் அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.


இவ் வேளைகளில் சமூகவலைத்தளங்களில் ஊடகங்களில் பிரசுரிக்கப்படும் செய்திகளை முழுமையாக கிரகிக்காமல் பிரசுரிக்கப்படுகின்றமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது

இதனை ஒரு உண்மை தன்மையை மறைக்கும் செயற்பாடாக அதாவது வதந்தி என கணிப்பீடு செய்யலாம்.


மக்கள் கொரோனா அரக்கனுக்கு பயந்து தங்களது உறவுகளையே தங்களது வீட்டிற்கு வரவேண்டாம் என்று செல்லிக் கொள்ளும் அளவிற்கு நாட்டின் சூழலில் மாற்றம் காணும் இத் தருணத்தில் உண்மை தன்மையான செய்திகளை வெளியிட ஊடகவியலாளர்கள் தங்களது குடும்பங்களையும் பற்றி சிந்திக்காமல் வெளிக்கள பயணங்களை மேற் கொண்டு உண்மையான நடு நிலையான செய்திகளை மக்களுக்கு உடனுக்குடன் நடு நிலையான ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்துகின்றனர்.

ஆனால் சமூக வலைத்தள உரிமையாளர்கள் வெளிக்கள பயணங்கள் மேற் கொள்கின்றனரா ? களத்தில் உண்மை நிலைமைகளை அறிந்து செய்தி எழுதுகின்றர்களா? அது முறையான விதத்தில் எழுதப்படும் செய்திகளா என்பதை நான் ஒரு கேள்விக்குறியாகவே பார்க்கின்றேன் !


முகநுால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக தற்போதைய கால கட்டத்தில் காணப்படுகின்றது . ஒரு நாட்டின் அரசியல் சூழ் நிலைகளை மாற்றியமைக்கும் சக்தியாக இது காணப்பட்டாலும் இதில் வரும் சில குறைபாடுகள் இதன் மதிப்பீட்டை குறைக்கின்றது.

-போலி முகநுால்கள் மற்றும் முழுமையாக ஒரு செய்தியினை கிரகிக்காமல் அவசரப்பட்டு தான் வெளியிட வேண்டும் என்ற முகநுால் உரிமையாளர்களின் முன்னாயத்தமற்ற செயல் என்பன சமூக வலைத்தளங்களை வேறு கண்ணோட்டத்திற்கு கொண்டு செல்கின்றது.


ஊடகம், செய்தி என்ற செயற்பாட்டினை நிறைவேற்ற ஊடகவியலாளர்களும்  மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட் ஊடகங்களும் இருக்க சமூக வலைத்தளங்களில் அதன் உரிமையாளர்கள் செய்தியினை பதிவேற்றம் செய்ய ஏன் முனைகின்றார்கள் என்பதற்கு இது வரை தெளிவான ஒரு வரை விலக்கணம் இல்லை ஒவ் வொன்றினையும் நியாயப்படுத்த ஒவ்வொரு காரணங்கள் உள்ளது போன்றே இதற்கும் ஒரு காரணம் இருக்கும். ஆதலால் நான் இதற்கு காரணம் கூற வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கின்றேன்.

உங்களுக்கு என ஒரு அடையாளங்களை நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு நான் உடன்படுகின்றேன் மதிப்பளிக்கின்றேன் ஆனால் அதற்காக ஏன் ஊடக செய்திகளுக்கு மட்டும் சமூக வலைத்தள நண்பர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை

நீங்களும் உங்களுக்கான அடையாளத்தினை உருவாக்க முயற்சித்தால் உங்களது தனிப்பட்ட திறமைகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுங்கள் ஆரம்பத்தில் ஒரு தனி நபரது திறமைகள் சமூக வலைத்தளங்களில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை ஏன் ? என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை .

ஆனால் முயற்சியே வெற்றியின் படி என்பதை என்னால் நம்ம முடியும்.


கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களில் பொய்வதந்தி பரப்பிய குற்றத்திற்காக ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்த விடையம் இதற்குள் நாமும் சிக்கிவிட கூடாது என்ற நோக்கத்தில் உங்களது பதிவுகள் அமைய வேண்டும் என நான் விரும்புகின்றேன் நீங்கள் நன்மை என கருதி வெளியிடும் செய்தி கூட ஒரு சிலவேளைகளில் உங்களுக்கு பாதகமாக அமையலாம்



சமூக வலைத்தளம் என்றால் என்ன ?


சுருக்கமாக கூறப்போனால்

சமூகங்களுக்கிடையில் ஒரு ஒற்றுமையையும் தொடர்புகளையும் இலகுவாக்கி ஒருவருக் கொருவர் சரியான புரிந்துணர்வு நிலைப்பாட்டை உருவாக்கி முரண்பாடுகளை தவிர்த்து ஒற்றுமையாக சமூகத்தினை உருவாக்கி தங்களுக்கு என ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி ஒருவரது தனித்திறமையினை சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் ஒரு கருவிமாத்திரமே

ஊடகம் என்றால் என்ன ?


ஒலி, ஒளி, இசை, அனைத்தையும் உள்ளடக்கிய இணைய ஊடகம், காற்றலை ஊடகம், என பல வகையில் ஊடகங்கள் உண்டு  உண்மைத்தன்மைகளை தீரவிசாித்து அதன் உண்மைத்தன்மையை சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து அதன் சாதக பாதகங்களை உணர்ந்து யாருக்கும் பாதிப்பு வரா வண்ணம் உத்தியோக பூர்வமான முறையில் மக்களுக்கு செய்திகளை நடுநிலையாகவும் உண்மைத்தன்மையுடனும் வழங்குவதே ஊடகம்  இச் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் பின்பற்றப்படுகின்றதா என்பது கேள்விக்குறி ? 


சமூக வலைத்தளம்  என்றால் என்ன ? ஊடகம் என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே தமக்குள் இருக்கும் திறமைகளை வெளிக் கொணர்வதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியே சமூகவலைத்தளங்கள் இதனை சரியானமுறையில் அது உருவாக்கப்பட்டுள்ள நோக்கத்திற்காக பயன்படுத்துவதே சிறந்தது.

சமூக வலைத்தள பயன்பாடு இன்றியமையாது ஒரு சமூகத்தினை சீர் செய்வதற்கு ஆனால் போலி, வதந்தி என இதன் மதிப்பை குறைக்காமல் உபயோகித்தால் சிறப்பு.

இதன் போது கண்ணதாசனின் பாடல் வரிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றது “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்எல்லாம் சௌக்கியமே” என்ற பாடல் வரிகளுடன் விடை பெறுகின்றேன் நன்றி !


வாழ்வில் உயர்வு பெற பொறுமை மிகமுக்கியம் 

No comments: