விவசாயத்திற்கு முன்னுரிமையளிக்கும் ஜனாதிபதி !


நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் ஒன்றிணைத்து விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்தல் மற்றும் அவற்றை  களஞ்சியப்படுத்தி விநியோகிப்பதற்காக புதிய பொறிமுறையொன்று  அனைத்து அரசாங்க அதிபர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மாவட்ட செயலாளர்களுடன் இன்று 2020.04.20  இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரை அறிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக பலம்பெறுவது அரசாங்கத்தின் நோக்கமாகும் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

.அதற்காக விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கி தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட மட்டத்தில் சுதேச கைத்தொழில்கள் மற்றும் ஏனைய உற்பத்தி கைத்தொழில்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இதற்காக தொழில் முயற்சியாளர்களை வலுவூட்ட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு முழுமையான உதவியை அரசாங்கம் என்ற வகையில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


No comments: