மட்டக்களப்பில் பால் உற்பத்தி, பால் பதனிடும் நிலைய ஊழியர்கள் வாழ்வதாரத்தை இழந்துள்ளனர்


செ.துஜியந்தன்

கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் பால் உற்பத்தியாளர்களும், பால் பதனிடும் நிலையங்களில் பணிபுரியம் ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.



மட்டக்களப்பு மட்டுப்படுத்தப்பட்ட போரதீவுப்பற்று கால் நடை வளர்ப்பு கூட்டுறவுச் சங்கத்தினால் நடத்தப்படும் அமுதசுரபி பால்பதனிடும் நிலையத்தில் போதியளவு பால் சேகரிப்பு இடம்பெறாமையினால் இங்கு உற்பத்தி செய்யப்படும் பால்பக்கற்றுக்களும்(யோக்கட்) தற்போது செய்யப்படுவதில்லை என இங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா அச்சம் காரணமாக பால்பண்ணையாளர்களின் வருகையும் இங்கு குறைவடைந்துள்ளது. 

இங்கு தற்போது கிடைக்கும் குறைந்தளவான பசும்பால் வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள பால் சேகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகின்றன.

இங்குள்ள அமுதசுரபி பால்பதனிடும் நிலையத்தில் பணிபுரியும் பயிற்சி ஊழியர்களுக்கும் கடந்த நான்கு மாதகாலமாக கொடுப்பனவும் வழங்கப்படவில்லை என கவலைதெரிவிக்கின்றனர்.

No comments: