ஆலைடிவேம்பு திருக்கோவில் பகுதிகளில் கனேடிய தமிழ் பேரவையின் நிவாரணப் பணி !


-அகத்தியன் செய்திப்பிரிவு-

கொவிட்-19 கொரோனா  வைரஸ் தொற்று  காரணமாக வட-கிழக்கில்  வாழ்வாதாரத்தினை இழந்து நிர்கதியாக்கப்பட்ட குடும்பங்களுக்கானக நிவாரணப் பணிகளை பல நல்லுள்ளங்களின் உதவியுடன் பல சமூகசேவை அமைப்புக்கள் முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில்  ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில்  கனேடிய தமிழ் பேரவையின் வடகிழக்கு நடுவத்தின் அம்பாரை மாவட்ட ஏற்பாட்டாளர் சமூக நேயன் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களின் தலைமையில் நிவாரணப்பணிகள் இடம் பெற்று கொண்டிருக்கின்றது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பனங்காடு பிரதேசத்திலும்  திருக்கோவில் பிரதேசத்தில் காஞ்சிரம்குடா, உமிரி, திருக்கோவில் போன்ற பகுதிகளில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் கஷட்டப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப்பணிகள் இன்று  (22) மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது தங்களின் நிலைமை அறிந்து உதவிய கனேடிய தமிழ் பேரவைக்கு மக்கள் நன்றி தெரிவித்ததுடன் தங்களது கஷ்ட நிலையைமயை சமூக நேயன் கி.ஜெயசிறில் அவர்களிடம் விளக்கினர் இதன்போது தான் மக்களுடைய கஷ்ட நிலைமை தொடர்பில்  கனேடிய தமிழ் பேரவையிடம் அறிவிப்பதாக அவர் மக்களிடம் வாக்குறுதியளித்தார்.


















No comments: