மது பானசாலைகளை முடுவதற்கு நடவடிக்கை எடுங்கள் -எடிக் நிலையம் !


கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விஞ்ஞான ரீதியில் செயற்பட்டு வந்த அரசாங்கம் தற்போது அதனை கைவிட்டு மதுபானகங்களை திறப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் எடிக் நிலையம் தெரிவித்துள்ளது

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுபான நிலையங்களை மீண்டும் திறக்கும்  அறிவிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடிக் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

இந்தநிலையில் மதுபான  நிலையங்கள் திறக்கப்படும்போது அதனை அருந்துவோர் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

இலங்கையின் தலைமைத்துவம் மற்றும் சுகாதார நிபுணர்களின் வழிகாட்டலில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மதுபானகங்கள் திறக்கப்பட்டால் விபத்துக்கள் அதிகரிக்கும். வாய்ப்புக்கள் அதிகம்  இச் செயற்பாமுடு கொரோனா வைரஸ் தடுப்பு பிரிவான சுகாதாரத்துறையினருக்கு மேலதிக பாரத்தை கொடுக்கும்.  சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வழியமைக்கும் என்று எடிக் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: