ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகளின் கவனத்திற்கு நாளை முதல் வழியனுமதி அவசியம் !


-அகத்தியன் செய்திப் பிரிவு-

நாளைமுதல் ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள் வழியனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆலையடிவேம்பு கிராம நிலாதாரிகள் அமைப்பு  விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குள் விவசாயியின் காணி காணப்படும் பட்சத்தில்  உரிய கமக்காரர் அமைப்பினூடாக பெரும்பாக உத்தியோகத்தரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும்-

-ஆலையடிவேம்பு எல்லைக்கு அப்பால்  (தாலிபோட்டாறு பாலத்துக்கு அப்பால்) எனில் கமக்காரர் அமைப்பினூடாக பெரும்பாக உத்தியோகத்தர் மற்றும் பொலிஸாரிடமும் அனுமதி பெறல் வேண்டும். எனவும் ஆலையடிவேம்பு கிராம நிலாதாரிகள் சங்கம் தனது உத்தியோக பூர்வ முகநுால் பக்கத்தில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வடுத்துள்ளது.
 

No comments: