ஆற்றங்கரை புதரில் பெண்ணின் எலும்புக் கூடு !


ஒரு பெண்ணி எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ள விடையமாகதது திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்செனம் பூண்டி என்ற கிராமம் காணப்படுகின்றது .  இங்குள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையில் நாணல் புதரில் ஒரு  எலும்புக்கூடு வெளியே நீட்டிக் கொண்டு காணப்பட்டுள்ளது.

இதை பார்த்து திகைப்படைந்த மக்கள்  திருச்செனம்பூண்டி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில்  பொலிஸாரிடம்  புகார் அளிக்கப்பட்டது . இதையடுத்து  திருவையாறு துணை போலீஸ்  மற்றும் தடயவியல் நிபுணர்கள் உட்பட பலரும் புதர் பகுதிக்கு விரைந்தனர்.

 அந்த அடையாளம் தெரியாத எலும்புக்கூடை தடவியல் நிபுணர்கள்  ஆய்வு செய்தபோது  அந்த எலும்புக்கூடு பெண்ணுடையது என்றும் 30 முதல் 40 வயது வரை உள்ள பெண்ணாக அவர் இருக்கலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டது.

எலும்புக்கூடு இருந்த புதர் பகுதியில் அந்த இடத்தில் ஒரு கொலுசு கிபெண்கள் அணியும் செருப்பு புடவையின் ஒரு பகுதியும் கிடந்தது  மேலுதம் குறித்த  எலும்புக்கூடும் காணப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அந்த பெண் இறந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் யார்? எப்படி  இறந்தார் என தெரியவில்லை தோகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: