ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் 39875 பேர் கைது !
நாடளாவிய ரீதியி்ல் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 20ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 39875 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்திற்குள் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 1,309 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 348 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் மொத்தமாக 10257 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments: