அம்பாறையில் ஊரடங்கு சட்டம் 20ம் திகதி சில பகுதிகளில் தளர்த்தப்பட மாட்டாது !


எதிர்வரும் 20ம் திகதி அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பொலிஸ்  பிரிவில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறியமுடிகின்றது.

மேலும் அம்பாறை மாவட்டத்தில்  மேற் குறித்த பொலிஸ் பிரிவுள் அல்லாத ஏனைய இடங்களில் எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை கிழைமை காலை 05 மணிக்கு ஊரடங்கு தர்த்தப்பட்டு மீண்டும் மாலை 08 மணிக்கு அமுல் படுத்தப்படும் எனவும்

மேலும் மறு அறிவித்தல் வரை மஹநுவர,கோலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள  (வரக்காபொலை, அக்குரண, அலவத்துகொட, அக்கரைப்பற்று) ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்காக ஊடரங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் என தெரியவருகின்றது.

இந் நிலையில் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் என்பதால் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும். எனினும் ஆலையடிவேம்பு பிரதேசம் தொடர்பில் இது குறித்து உத்தியோக பூர்வ செய்திகள் இன்னும் வெளியிடப்படவில்லை.







மேலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில்  ஊடரங்கு அமுலில் இருக்கும் வேளையில் ஆலையடிவேம்பு சாகாம வீதியில்  உள்ள தற்காலிக வர்த்தக நிலையங்கள் அனைத்தும் ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இயங்கும் என  ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன். தெரிவித்தார்.

No comments: