20ம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் இயங்கும் போக்குவரத்து சேவைகள் !


போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் ரயில்வே திணைக்களம் இலங்கை போக்குவரத்துச் சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை இணைந்து நடாத்திய கலந்துரையாடலின்போது எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்துச் சேவையை அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு முடிவெடுத்துள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும்போது சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கடுமையாக அமுல்படுத்தவும் இந்தக் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments: