புதிய இரு தேசிய பாடசாலைகள்

குருநாகல் மற்றும் வாரியபொல பிரதேசங்ங்களில் புதிதாக இரு தேசிய பாடசாலைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அனைத்து வசதிகளுடன் கூடிய இரு தேசிய பாடசாலைகளை குருநாகல் நகர எல்லையினுள் மற்றும் வாரியபொல நகரத்தில் அமைப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

மேலும் தேசிய பாடசாலைகளை ஸ்தாபிப்பது தொடர்பிலான தேசிய கொள்கை ஒன்றினையும் தயாரிக்க வேண்டும் எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

No comments: