தீபாவளி அன்று கௌரிகாப்பு& உபவாசம்| மறுநாள் பாரணை
இம்முறை கேதாரகௌரி விரதத்தின் இறுதி நாள் எதிர்வருகின்ற 08 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகும்.
அன்று தீபாவளி, அன்றைய தினம் காப்பு கட்டுதல் நிகழ்வும் உபவாசமும் இடம்பெறும்.
மறுநாள் பாரணை,இவ்வாறு கிழக்கிலங்கையின் பிரபல சிவாச்சாரியார் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள், விரதம் தொடர்பான விபரத்தை தெரிவிக்கையில் குறிப்பிட்டார் .
அவர் மேலும் கூறுகையில்..
எதிர்வரும் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 11:56 க்கு அமாவாசை தொடங்குகிறது.
அதன் பின்பு தான் காப்பு கட்டுதல் நடை பெறல் வேண்டும்.
அதேபோன்று உபவாசம் அன்று(8) காலை சூரியோதயம் ஆறு மணியுடன் தொடங்கி மறுநாள் 9ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
விரதாதிகள் இந்த முழு நாளும் உபவாசமாக இருப்பார்கள்.
மறுநாள் அமாவாசை 12:40க்கு முடிகிறது இருந்தபோதிலும் காலை 6 மணிக்கு உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம்.
ஒன்பதாம் தேதி சூரிய உதயம் 8.30 மணிக்கு முதல் பாரணை செய்து கொள்ள வேண்டும்.
அதன் மறுநாள்(10) செவ்வாய்க்கிழமை கந்தசஷ்டி ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தார்.

No comments: