ரூபாய் 628.9 மில்லியன் முதலீட்டில் கண்டி மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்.

டத்வா சூறாவளியினால் சேதமடைந்த கண்டி மாவட்டத்தின் வீதிகளைப் புனரமைத்தல் மற்றும் சரிவுகள் இஸ்திரத்தன்மையற்றதாகும் அபாயத்தைக் குறைக்கும் திட்டத்தின் நிர்மாணப் பணிகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன அவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் கண்டி – மஹியங்கனை – பதியத்தலாவ (A026) வீதியின் 34 மற்றும் 35 ஆவது கிலோமீற்றர் பகுதிகளை அண்டிய வீதிப் பகுதிகளும், மொரகஹமுல – விக்டோரியா அணைக்கட்டு (B493) வீதியின் 6 ஆவது கிலோமீற்றரை அண்டிய வீதிப் பகுதிகளும் முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட மொத்தத் தொகை ரூபா 628,900,686.30 ஆகும். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிநடத்தலில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் (RDA) முன்னெடுக்கப்படும் இதன் நிர்மாணப் பணிகளை 2027 நவம்பர் 02 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அனர்த்தத்தினால் சேதமடைந்த வீதிப் கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவருதல், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலச்சரிவுகள் மற்றும் சரிவுகள் இடிந்து விழும் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் அப்பகுதி மக்களுக்கு மிகவும் பாதுகாப்பானதும் நம்பகமானதுமான போக்குவரத்து வசதிகளை வழங்குதல் ஆகியன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.

ஊடகப் பிரிவு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு




No comments: