விநாயகபுரம் மகா வித்தியாலயத்திற்கு மங்கள வாத்திய கருவிகள் வழங்கி வைப்பு

திகோ /விநாயகபுரம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் கலை மற்றும் கலாசாரத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், மங்கள வாத்திய இசைக்கருவிகள் உள்ளிட்ட பாரம்பரிய கலாசார இசைக்கருவிகள் திகாமடுல்ல மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினரின் 2026 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த பொருட்கள் பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன்.

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இணையாக, அவர்களது கலைத்திறன்கள், ஆளுமை மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தின் மீதான ஈடுபாடு ஆகியவற்றையும் வளர்த்தெடுப்பது மிகவும் அவசியமானதாகும் என்றார்.

எமது பாரம்பரியக் கலைகளையும் கலாசார விழுமியங்களையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கும், மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் இத்தகைய பங்களிப்புகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என தெரிவித்தார்.




No comments: