சிறுத்தையின் பற்களுடன் சந்தேகநபர் அனுராதபுரத்தில் கைது!

சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக இரண்டு சிறுத்தைப் பற்களை வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப்படை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ரிதிகல மற்றும் அனுராதபுர வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து குடாபலடிகுளம் சந்தி பகுதியில் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கைச் சிறுத்தை நாட்டின் வனவிலங்குச் சட்டங்களின் கீழ் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள விலங்காகும்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட சிறுத்தைப் பற்களையும் நவம்பர் 28 ஆம் திகதி இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments: