மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விவசாயத்துறையின் பங்களிப்பு குறைந்து வருகின்றது எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விவசாயத்துறையின் பங்களிப்பு குறைந்து வருகின்றது எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (2026.11.25) எழுப்பியை முன்வைத்து பாராமன்றில் தெரிவிப்பு.
காலநிலை மாற்றம், புதிய பயிர் நோய்கள் மற்றும் பூச்சி அச்சுறுத்தல்கள் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், தேசிய வேளான்மை மேம்பாட்டிற்கு விஞ்ஞான ஆராய்ச்சி, உயிரியல் தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் தாவர மரபணு வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவை மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக காணப்படுகின்றன.
இதற்காக, வேளாண் உயிரித் தொழில்நுட்ப மையம் (AgBC), ஹோமகம தாவர வைரஸ் குறியீட்டு மையம் (PVIC) மற்றும் கன்னோருவ தாவர மரபணு வள மையம் (PGRC) போன்ற நிறுவனங்களின் வகிபாகங்களும், அவற்றின் ஆராய்ச்சித் திறனை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் தலையீடும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
எனவே, இந்நிறுவனங்களின் தற்போதைய முன்னேற்றம், பௌதீக வளங்கள் மற்றும் மனிதவள நிலை குறித்த பின்வரும் கேள்விகளை நான் முன்வைக்கிறேன்.
01. ஹோமகம தாவர வைரஸ் குறியீட்டு மையம் (PVIC) மற்றும் கன்னோருவ தாவர மரபணு வள மையம் (PGRC) ஆகியவற்றின் தற்போதைய பணிகள், 2023 முதல் 2026 வரை முன்னெடுக்கப்பட்ட முக்கிய ஆராய்ச்சித் துறைகள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்கள் யாவை?
ஒவ்வொரு திட்டத்தின் முன்னேற்றம் யாது, மேலும் அவை விவசாய உற்பத்திக்கும் விவசாய சமூகத்திற்கும் நடைமுறையில் எவ்வாறு பங்களித்துள்ளன என்பதனை தனித்தனியே குறிப்பிட முடியுமா?
02. 2023 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும் அரசாங்கத்தால் பெற்றுக் கொடுக்கப்பட்ட வருடாந்த ஒதுக்கீடுகள், உண்மையான செலவினங்கள் மற்றும் பிற நிதி அல்லது பௌதீக வளங்கள் யாவை?
03. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் உயிரித் தொழில்நுட்ப மையத்தை (AgBC) தேசிய வேளாண் ஆராய்ச்சித் திட்டத்துடன் ஒருங்கிணைப்பதற்கும், அதன் ஆராய்ச்சிக்கு அரச ஆதரவு, போட்டி அடிப்படையிலான ஆராய்ச்சி நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை பெற்றுக் கொடுப்பதற்கும், விவசாய அமைச்சு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன? அந்த மையத்தின் ஆராய்ச்சி முடிவுகள் தேசிய விவசாய அபிவிருத்தித் திட்டங்களுக்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன?
04. AgBC யால் உருவாக்கப்பட்ட புத்தாக்கங்களுக்குக் காப்புரிமை பெறுவதற்கும், அவற்றை வணிகமயமாக்குவதற்கும் விவசாய அமைச்சால் முன்னெடுக்கப்படும் ஏதேனும் செயல்முறை காணப்படுகின்றதா?
05. ஹோமகம தாவர வைரஸ் குறியீட்டு மையத்தின் (PVC) அனுமதிக்கப்பட்ட பணிக்குழாம் மற்றும் பிரிவுகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள், தற்போதைய பணியாளர்கள் மற்றும் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது? அதன் ஆராய்ச்சி ஆய்வகங்கள், உபகரணங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வசதிகளின் தற்போதைய நிலை யாது?
06. பி.வி.ஐ.சி-யின் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடரவும், பயிற்சி பெற்ற ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், தற்போதுள்ள மனிதவளப் பற்றாக்குறையைச் சரிசெய்யவும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அல்லது எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் யாது?
07. கன்னோருவ தாவர மரபணு வள மையத்தில் (PGRC) பாதுகாக்கப்பட்டுள்ள தாவர மரபணு வளங்கள், அதன் சேமிப்பபுத் திறன், ஆராய்ச்சி வசதிகள் மற்றும் மனித வளங்களின் தற்போதைய நிலை யாது? அதன் மரபணு வங்கியை நவீனமயமாக்குவதற்கும், பாதுகாப்பான நகல் பாதுகாப்பு, உறைநிலை பாதுகாப்பு மற்றும் டி.என்.ஏ வரிசைப்படுத்துதல் போன்ற தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கும் விவசாய அமைச்சால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் யாவை?
08. மேற்கூறிய நிறுவனங்களின் ஆராய்ச்சித் திறன், உட்கட்டமைப்பு மற்றும் மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் கால அட்டவணையுடன் கூடிய அபிவிருத்தித் திட்டமொன்று அரசிடம் காணப்படுகின்றதா ? ஆமெனில், அதன் தற்போதைய முன்னேற்றம் யாது ?

No comments: