அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கக் கூட்டத்தில் பங்கேற்றார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இலங்கை 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய இல்லத்தில், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தேயு டக்வொர்த் (Matthew Duckworth) அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திலும் வரவேற்பு நிகழ்விலும் பங்கேற்றார்.

இலங்கை - அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், நிலையான அபிவிருத்தி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட முன்னுரிமைகள் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட அபிவிருத்திப் பங்காண்மைகளுக்கான வழிகளை ஆராய்வதற்கும் இந்நிகழ்வு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தந்தது. 

சஜித் பிரேமதாசா (ஊடகப் பிரிவு)









No comments: