ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 34 பேருக்கு வயல் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!

(செல்வி வினாயகமூர்த்தி)

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் மற்றும் அலிக்கம்பை பகுதிகளில் நீண்டகாலமாக அனுமதிப்பத்திரமின்றிப் பயன்பாட்டிலிருந்த வயல் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (23) திங்கட்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீண்டகாலமாக வயல் காணிகளைப் பயன்படுத்தி வந்தும் உரிய அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அவற்றை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தமிழ் சமூகத்தைச் சேர்ந்த 18 பேருக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 16 பேருக்கும் என மொத்தம் 34 பேருக்கு வயல் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் மா. ராமக்குட்டி, காணி உத்தியோகத்தர் லோகினி கோகுலன், சிரேஷ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் ஆர். ஜெகதீஸ்வரன், கிராம உத்தியோகத்தர்களான ஆர்.ஜெயந்தராஜ் மற்றும் ஆர்.நிதர்சன் , கே. அருள்ராஜா, ஏ.எல். பிஷ்ருல் ஹாபி, ஜி. அனிதா, ஏ.ஆர். பாத்திமா சியாதா, எஸ். மயூரகாந்தன் உள்ளிட்ட காணிப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

நீண்டகாலமாக உரிய காணி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வயல் காணிகளைப் பயன்படுத்தி வந்த பயனாளிகளுக்கு இவ்வனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமைஅவர்களின் காணிப் பயன்பாட்டை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.









No comments: